< Back
சினிமா செய்திகள்
காந்தாரி படப்பிடிப்பை நிறைவு செய்த டாப்ஸி பன்னு
சினிமா செய்திகள்

'காந்தாரி' படப்பிடிப்பை நிறைவு செய்த டாப்ஸி பன்னு

தினத்தந்தி
|
17 March 2025 8:54 PM IST

கனிகா தில்லான் எழுதி தயாரிக்கும் 'காந்தாரி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

மும்பை,

தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்சி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 2 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் அவர், 'டங்கி', 'ஜுட்வா 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், கனிகா தில்லான் எழுதி தயாரிக்கும் புதிய ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காந்தாரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் தேவாஷிஷ் மகிஜா இயக்குகிறார். இப்படம் ஒரு தாய்க்கும் அவரது குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை எடுத்துக்காட்டும் படமாக தயாராகியுள்ளது.

இந்த நிலையில், நடிகை டாப்ஸி பன்னு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காந்தாரி படப்பிடிப்பு பணி நிறைவடைந்துள்ள பதிவிட்டுள்ளர். அதில் 'இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது, சில காயங்களும் ஏற்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மனநிறைவைத் தருகின்றன. நாங்கள் முழு உழைப்பு அனைத்தையும் கொடுத்தோம்! விரைவில் இப்படத்தை உங்களிடம் கொண்டு வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்