< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பவதாரணியுடன் இனிய நினைவுகள்: யுவன் சங்கர் ராஜா பகிர்ந்த வீடியோ வைரல்
|9 Nov 2024 9:04 PM IST
யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமானவர் பவதாரணி. இவர் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான 'மை டியர் குட்டிச் சாத்தான்' மலையாள படத்தில் இடம்பெற்ற 'திதிதே தாளம்' பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, 'ராசய்யா', 'அலெக்சாண்டர்', 'தேடினேன் வந்தது', 'காதலுக்கு மரியாதை', 'அழகி', 'பிரண்ட்ஸ்', 'தாமிரபரணி', 'உளியின் ஓசை', 'கோவா', 'மங்காத்தா', 'அனேகன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடினார். இவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது சகோதரி பவதாரணியுடன் இனிய நினைவுகள் என்ற தலைப்பில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.