< Back
சினிமா செய்திகள்
Suryas Saturday movie trailer goes viral
சினிமா செய்திகள்

வைரலாகும் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட டிரெய்லர்

தினத்தந்தி
|
13 Aug 2024 9:45 PM IST

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், வரும் 29 -ந் தேதி 'சூர்யாவின் சனிக்கிழமை' வெளியாக உள்ளது.

சென்னை,

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அந்தே சுந்தரானிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் இணைந்துள்ளார். நானிக்கு ஜோடியாக இப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படத்தை 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்தப்படம் பான் இந்திய படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி இப்படம் வரும் 29 -ந் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அதனைத்தொடர்ந்து, டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்