< Back
சினிமா செய்திகள்
எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி: கங்குவா படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கம்
சினிமா செய்திகள்

எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி: 'கங்குவா' படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கம்

தினத்தந்தி
|
19 Nov 2024 4:05 PM IST

சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது.

சென்னை,

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14-ந் தேதி வெளியான படம் 'கங்குவா'. இந்த படத்தில் பாபி தியோல், நட்டி, திஷா பதானி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இத்திரைப்படத்தில் நடித்த சூர்யாவை பலர் விமர்சித்து வரும் நிலையில், நடிகை ஜோதிகா மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை ஜோதிகா படம் குறித்து விளக்கமான பதிவை வெளியிட்டு எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்பதிவு வைரலானதுடன், கவனத்தையும் பெற்றது.

ரசிகர்கள் தரப்பிலிருந்து படத்தின் வசனம் மற்றும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இசை தொடர்பான பிரச்சினை சரிசெய்யப்பட்டு இன்று முதல் புது வெர்ஷனில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் 'கங்குவா' படத்தில் இடம்பெற்ற நிகழ்கால காட்சிகளிலிருந்து 12 நிமிடத்தை நீக்கியுள்ளது. இதனால், 2 மணி 22 நிமிடங்கள் ஓடக்கூடிய கங்குவாவின் புதிய வடிவம் விரைவில் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும் என தகவல் வெளியானது. முதல் நாளில் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்த கங்குவா, தற்போது ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 3 நாட்களில் 128 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் செய்திகள்