< Back
சினிமா செய்திகள்
நாளை ரீ-ரிலீஸாகிறது சூர்யாவின் வேல் திரைப்படம்
சினிமா செய்திகள்

நாளை ரீ-ரிலீஸாகிறது சூர்யாவின் 'வேல்' திரைப்படம்

தினத்தந்தி
|
18 July 2024 6:45 PM IST

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை 'வேல்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யா தனது 49-வது பிறந்தநாளை வருகிற 23-ம் தேதி கொண்டாட உள்ளார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் அல்லது டிரெய்லர் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

கடந்த சில வருடங்களாக நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் புத்தக தானம், ரத்த தானம், மரங்கள் நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா பிறந்தநாளையொட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்துள்ளார்.

நடிகர் சூர்யா தனது 49-வது பிறந்தநாளை வரும் 23-ம் தேதி கொண்டாடுகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் ரத்த தானம் செய்தார்.

இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த 'வேல்' படத்தை வரும் 19-ம் தேதி ரீ ரிலீஸ் செய்கின்றனர். சூர்யாவின் 'வேல்' படம் வெளியாகி தற்போது 17 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியானது 'வேல்' படம். இதில் சூர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார். அசின், வடிவேலு, கலாபவன் மணி, சரண்ராஜ், அம்பிகா உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தற்போது இவர், சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் மிருணால் தாக்கூர், யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் பிறந்தநாளையொட்டி ரீ -ரிலீஸான கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அஜித் பிறந்தநாளையொட்டி தீனா வெளியாகி வெற்றி பெற்றது.

'கங்குவா' முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்