< Back
சினிமா செய்திகள்
இரும்பு கை மாயாவி படம் குறித்து பேசிய சூர்யா !
சினிமா செய்திகள்

'இரும்பு கை மாயாவி' படம் குறித்து பேசிய சூர்யா !

தினத்தந்தி
|
29 Oct 2024 5:49 PM IST

கடந்த சில வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'இரும்பு கை மாயாவி' என்ற படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார்.

சென்னை,

நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் தனது 42-வது படமான கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது.

அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45' படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'இரும்பு கை மாயாவி' என்ற படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். இந்த படம் லோகேஷ் கனகராஜின் கனவு திட்டம் என்று அவர் பலமுறை பல இடங்களில் கூறி இருக்கிறார். இப்படம் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் 'இரும்பு கை மாயாவி' படம் குறித்து பேசி உள்ளார். அதில் 'மீண்டும் இப்படம் எனக்கு வருகிறதா அல்லது வேறு பெரிய நடிகருக்கு செல்கிறதா என்று தெரியவில்லை. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் நடிகர் அமீர் கானிடம் இப்படத்தின் கதையை கூறியுள்ளார் என்று அதனை அவர் ஒப்புக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது' அந்த படம் மீண்டும் எனக்கு வருமா என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்