< Back
சினிமா செய்திகள்
Suriya recalls being paid 3 times less than Jyothika
சினிமா செய்திகள்

ஜோதிகாவை விட 3 மடங்கு குறைவாக சம்பளம் வாங்கியதை நினைவுக்கூர்ந்த சூர்யா

தினத்தந்தி
|
10 Nov 2024 7:39 PM IST

ஜோதிகாவை விட 3 மடங்கு குறைவாக சம்பளம் வாங்கியதை நடிகர் சூர்யா நினைவுக்கூர்ந்தார்.

சென்னை,

சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவா இயக்கிய இப்படம் வரும் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரமோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, 'காக்க காக்க' படத்தில் தன்னை விட 3 மடங்கு அதிகமாக ஜோதிகா சம்பளம் பெற்றதாக கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

'நான் நடித்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படம்தான் ஜோதிகாவின் முதல் தமிழ் படம். இந்தியில் டோலி சாஜா கே ரக்னாவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது படமாக இது இருந்தது. எனக்கு தமிழ் தெரியும், இருந்தும் வசனங்களை மறந்து தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருந்தேன். இதனால், என்னுடைய மூன்றாவது அல்லது நான்காவது படத்தில் எனக்கு நடிக்க தெரியவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் வந்தன.

ஆனால் என்னை விட ஜோதிகா நன்றாக வசனங்களை கூறினார். அதனால் அவர் வெற்றியை நோக்கி நகர்ந்தார். 'காக்க காக்க' படத்தில், ஜோதிகாவின் சம்பளம் என்னை விட மூன்று மடங்கு அதிகம். நான் நிலையான ஒரு இடத்தை பெற ஐந்து வருடங்கள் ஆனது' என்றார்.


மேலும் செய்திகள்