< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பெயரை கூறாமல் மறைமுகமாக விஜய்க்கு வாழ்த்து கூறிய சூர்யா
|27 Oct 2024 8:25 AM IST
இன்று கட்சியின் முதல் மாநாட்டை நடத்தும் விஜய்க்கு மறைமுகமாக சூர்யா வாழ்த்து கூறினார்.
சென்னை,
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சூர்யா, தற்போது துணை முதல்-அமைச்சராக உள்ள உதயநிதிஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார். தொடர்ந்து பேசிய சூர்யா, இன்று கட்சியின் முதல் மாநாட்டை நடத்தும் விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்து கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
"இன்னொரு நண்பர் இருக்காரு; ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு.. அவரோட வரவு நல்வரவாக இருக்கட்டும்.."என்றார்.