சிவராஜ்குமார் பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா, ராம் சரண்?
|'பைரதி ரணங்கள்' பட இயக்ககுனர் நர்த்தன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்
சென்னை,
பிரபல கன்னட இயக்குனர் நர்த்தன். ஆக்சன் படங்களை கொடுப்பதில் சிறந்தவராக உள்ள இவரது இயக்கத்தில், நடிகர் கருநாட சக்கரவர்த்தி மற்றும் சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'முப்தி' மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது.
தற்போது, முப்தியின் இரண்டாம் பாகமான 'பைரதி ரணங்கள்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையும் நர்த்தனே இயக்கி இருக்கிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நர்த்தன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'எனது அடுத்த படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. ஆனால் நாங்கள் இன்னும் படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கவில்லை. இதற்காக சூர்யா மற்றும் ராம் சரண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இறுதி செய்த பின் அறிவிப்பை வெளியிடுவோம்' என்றார்.
தற்போது ராம் சரண் ஆர்.சி.16 படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம், நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். நர்த்தனின் அடுத்த படத்தில், இவர்களில் யார் முன்னணி நடிகராக இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.