'சூர்யா 44': 4-வது முறையாக சூர்யாவுடன் இணைகிறாரா பிரகாஷ்ராஜ்?
|'சூர்யா 44' படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது.
நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருந்தார். இந்நிலையில், இப்படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு சூர்யா- பிரகாஷ்ராஜ் கூட்டணியில் நேருக்கு நேர், சிங்கம், ஜெய் பீம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது வெளியாகி உள்ள தகவல் உண்மையாகும் பட்சத்தில் சூர்யா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கும் 4-வது படமாக 'சூர்யா 44' அமையும்.