சன்னி தியோலுடன் முத்தக்காட்சியில் நடித்ததை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை
|'பெயிண்டர் பாபு' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் மீனாட்சி சேஷாத்ரி
மும்பை,
1983-ம் ஆண்டு வெளியான 'பெயிண்டர் பாபு' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் மீனாட்சி சேஷாத்ரி . அடுத்ததாக, சுபாஷ் கய் இயக்கிய 'ஹீரோ' திரைப்படத்தில் நடித்த பிறகு மக்களிடையே அவர் மிகவும் பிரபலமானார்.
அதன் பின்னர், 1995-ம் ஆண்டு ஹரிஷ் மைசூருவை திருமணம் செய்து கொண்ட மீனாட்சி சேஷாத்ரி, திரைத்துறைக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றார். மீண்டும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் சன்னி தியோலுடன் முத்தமிடும் காட்சியை நினைவு கூர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
'என் முதல் படமான பெயிண்டர் பாபுவிற்கு பிறகு முத்தக்காட்சியில் நடிக்க கூடாது என்று இருந்தேன். ஆனால், 'டகாயிட்' படத்தில் சன்னி தியோலும் நானும் படகில் இருக்கும்போது ஒரு பாடல் வரும். அப்போது அந்த பாடல் தொடங்குவதற்கு முன்பு அவர் என்னை முத்தமிடுவார். அது ஒரு உண்மையான முத்தம். அப்போது எனக்கு சிறிது பதற்றம் ஏற்பட்டது.
சன்னி தியோல் ஒரு நல்ல மனிதர். அவருடன் நடிக்கும்போது கவலையில்லாமல் வேலையை எளிதாக செய்ய முடிந்தது. இதுதான் நான் அவருடன் நடித்த காயல், கடக் மற்றும் தாமினி ஆகிய படங்கள் நல்லா வந்ததற்கு காரணமாக இருக்கலாம்' என்றார்.