< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

"ராக்கெட் டிரைவர்" படத்தின் டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
4 Oct 2024 9:26 PM IST

சுனைனா நடித்துள்ள "ராக்கெட் டிரைவர்" படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை,

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை.

அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கவுஷிக் கிரிஷ் இசையமைக்கிறார்.

"ராக்கெட் டிரைவர்" படத்தின் 'குவாண்டம் பாய்ச்சல்' , ' அவரும் சேதுதாரா ' வீடியோ பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் "ராக்கெட் டிரைவர்" படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு தற்போது வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்