< Back
சினிமா செய்திகள்
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரம்:  இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்
சினிமா செய்திகள்

அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரம்: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்

தினத்தந்தி
|
28 Dec 2024 2:35 PM IST

அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்

சென்னை,

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த வன்கொடுமை தொடர்பாக திரைத்துறையினர் பெரும்பாலும் மெளனம் காத்து வருகிறார்கள். இந்நிலையில், திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணா பல்கலைகழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். " பெண்களுக்கு அதிக சக்தியும் பலமும் கிடைக்கட்டும். இந்த நிகழ்வில் சம்பந்தபட்ட அனைத்து ஆண்களும் நரகத்தில் அழுகட்டும்" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்