< Back
சினிமா செய்திகள்
Struggling to Pay Rent - Bollywood Actor Shares Challenges Faced with Film Failure
சினிமா செய்திகள்

'வாடகை கொடுக்க சிரமப்பட்டேன்' - பட தோல்வியால் சந்தித்த சவால்கள் குறித்து பகிர்ந்த நடிகர்

தினத்தந்தி
|
2 Nov 2024 10:32 AM IST

தனது படங்கள் தோல்வி அடைந்தபோது சந்தித்த சவால்கள் குறித்து கார்த்திக் ஆர்யன் பேசினார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன். இவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் சந்து சாம்பியன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனது படங்கள் தோல்வி அடைந்தபோது சந்தித்த சவால்கள் குறித்து கார்த்திக் ஆர்யன் பேசினார். இது குறித்து அவர் கூறுகையில்,

'நான் ஒரு வீட்டில் தனியாக வசித்தேன். அந்த சமயத்தில் வந்த எனது படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. அதன்படி, 'பியார் க பஞ்சநாமா' அதற்கு பின் வந்த 'ஆகாஷ் வாணி' அதனைதொடர்ந்து வந்த 'காஞ்சி' என எதுவும் எனக்கு சாதகமாக அமையவில்லை. இதனால், வீட்டின் வாடகையை செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். அதைப் பற்றி அதிகம் பலருக்கு தெரியாது' என்றார்.

கார்த்திக் ஆர்யன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'பூல் பூலையா 3'. இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இப்படத்தின் 3-ம் பாகம் வெளியாகி உள்ளது. அனீஸ் பஸ்மி இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக் ஆர்யனுடன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் முதல் நாளில் ரூ.35 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான இதன் 2-ம் பாகம் முதல் நாளில் ரூ. 13 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்