'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' அப்டேட்: 8 எபிசோடுகளின் தலைப்பு வெளியானது
|ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'
சென்னை,
ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல், ஹாலிவுட் வெப் தொடருக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இதில் வினோனா ரைடர், டேவிட் ஹார்பர், பின் வொல்ஹார்ட், மில்லி பாபி பிரவுன், கேடன் மாடராஸ்ஸோ, காலேப் மெக்லாலின், நடாலியா டயர், சார்லி ஹீட்டன், காரா புவோனோ மற்றும் மேத்யூ மோடின் ஆகியோர் நடித்தனர்.
இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து, 5-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். இந்நிலையில், இந்த சீசனின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்த தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' 'தி கிரவுல்' என்ற தலைப்பில் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து இரண்டாவது எபிசோடு 'தி வானிஷிங் ஆப்**'. மற்ற எபிசோடுகள் 'தி டர்ன்போ டிராப்', 'சோர்சரர்', 'ஷாக் ஜாக்', 'எஸ்கேப் பிரம் கேமசோட்ஸ்', 'தி பிரிட்ஜ்' மற்றும் 8-வது எபிசோடுக்கு 'தி ரைட்சைட் அப்' என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடர் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.