< Back
சினிமா செய்திகள்
ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஸ்டார் பட நடிகை
சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஸ்டார் பட நடிகை

தினத்தந்தி
|
23 Nov 2024 9:36 PM IST

'லிப்ட்' பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.

சென்னை,

நடிகர் கவின், ஆரம்பத்தில் சின்னத்திரையில் நாயகனாக நடித்து பிரபலமானார். இப்படி நடித்து, பலர் மனங்களில் இடம் பிடித்த இவர், அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், இப்போது பிரபல ஹீரோவாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். கடந்தாண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து வெளியான லப்பர் பந்து திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இதற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார் ஹரிஷ் கல்யாண்.

கடந்த சில தினங்களாகவே கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வர பிரசாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுவரை இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் வெளியான படம் 'லிப்ட்'. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற கவின், நடிகை அமிர்தா ஐயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

நடிகை பிரீத்தி முகுந்தன், கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்