< Back
சினிமா செய்திகள்
SSMB29: Rajamouli looking for locations in Africa
சினிமா செய்திகள்

'எஸ்எஸ்எம்பி29' : லொகேசன் தேடும் ராஜமவுலி

தினத்தந்தி
|
1 Nov 2024 7:05 AM IST

இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், படப்பிடிப்பிற்கான லோகேசன் தேடும் பணியில் இயக்குனர் ராஜமவுலி ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவுக்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்