< Back
சினிமா செய்திகள்
SS Rajamouli REACTS to Sunflowers Were the First Ones to Know winning at Cannes 2024: Indian talent breaching boundaries
சினிமா செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா: முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம் - ராஜமவுலி வாழ்த்து

தினத்தந்தி
|
25 May 2024 10:23 AM IST

'சன்பிளவர்ஸ்' குறும்படம் லா சினிப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. அதில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தை இந்திய குறும்படங்கள் பிடித்திருப்பது ரசிகர்களை குதூகலமடையச் செய்திருக்கிறது.

இயக்குனர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சன்பிளவர்ஸ்'. 16 நிமிடங்கள் ஓடக்கூடிய புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்களின் தயாரிப்பில் உருவான குறும்படம் இது.

77-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறந்த குறும்படத்திற்கான லா சினிப் பிரிவில் இடம் பெற்ற இந்தியத் திரைப்படப் பள்ளியின் ஒரே திரைப்படமாக இது உள்ளது. திரையிடல் முடிந்த பிறகு 'சன்பிளவர்ஸ்' குறும்படம் லா சினிப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் பரிசு பெற்ற 'சன்பிளவர்ஸ்' படக்குழுவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய திறமை எல்லைத்தாண்டி பிரதிபலிக்கிறது... கேன்ஸ் 2024 இல் சிறந்த குறும்படத்திற்கான லா சினிப் விருதை சிதானந்தஸ்நாயக்கின் 'சன்பிளவர்ஸ்' வென்றுள்ளது என்பதைக் கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி! இளைஞர்களுக்கு பாராட்டுகள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்