< Back
சினிமா செய்திகள்
SS Rajamouli pride of Indian cinema
சினிமா செய்திகள்

'அவர் இந்திய சினிமாவின் பெருமை' - ஷங்கர்

தினத்தந்தி
|
6 Jan 2025 8:15 AM IST

சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமவுலி கலந்து கொண்டார்.

அப்போது இயக்குனர் ஷங்கர், ராஜமவுலியை இந்திய சினிமாவின் பெருமை என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

"நாம் அனைவரும் ஹாலிவுட்டை பார்த்து, அவர்கள் திரைப்படங்களை உருவாக்கும் விதத்தை ரசிக்கிறோம். அதே தரத்தில் திரைப்படங்களை உருவாக்கி இந்திய சினிமாவை ரசிக்க வைத்தவர் எஸ்.எஸ். ராஜமவுலி. அவர் இந்திய சினிமாவின் பெருமை. அவர் எனது படத்தின் டிரெய்லரை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்