< Back
சினிமா செய்திகள்
SS Rajamouli - Mahesh Babu film to be made in two parts?
சினிமா செய்திகள்

இரண்டு பாகங்களாக உருவாகும் எஸ்.எஸ்.ராஜமவுலி - மகேஷ் பாபு படம்?

தினத்தந்தி
|
10 Dec 2024 12:01 PM IST

ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மகேஷ் பாபு துவங்குவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்