< Back
சினிமா செய்திகள்
அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜமவுலி!
சினிமா செய்திகள்

அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜமவுலி!

தினத்தந்தி
|
25 Jan 2025 2:51 PM IST

நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார் ராஜமவுலி.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார். மேலும், இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், இதன் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. அமேசான் காடுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான தகவல்கள் உறுதியாகியுள்ளன.

இந்நிலையில் இப்படம் பற்றி ராஜமவுலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிங்கம் ஒன்று கூண்டில் இருக்கும் புகைப்படத்தை ராஜமவுலி பார்த்தபடி நிற்கிறார். பின் தனது கையில் பாஸ்போர்ட் ஒன்றை அவர் காட்டுகிறார். மகேஷ் பாபுவை சமீப காலங்களில் ரசிகர்கள் லயன் என்று அழைத்து வருகிறார்கள். தனது படத்திற்கு மகேஷ் பாபுவின் கால்ஷீட் பெற்றுள்ளதைதான் ராஜமவுலி இப்படி சிம்பாலிக்காக சொல்கிறார்.

மேலும் செய்திகள்