'புஷ்பா 2' படத்தில் நடனமாடிய ஸ்ரீலீலா
|புஷ்பா படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியது இந்தியா முழுவதும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்' . இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.
'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.
'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட்டானது. அடுத்ததாக, புஷ்பா -2 படத்தில் யார் அப்படி நடனமாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக இந்தி நடிகைகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. பின்னர் ஷ்ரத்தா கபூர் தேர்வு செய்யப்படுவார் என்று ஆரம்பத்தில் வதந்திகள் வந்தன.
இந்த நிலையில் 'குறிச்சின்னி மடத்தோப்பேட்டி' பாடலின் மூலம் வைரலான நடிகை ஸ்ரீலீலா தற்போது புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இது ஸ்ரீலீலா புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஒரு ஐட்டம் பாடலில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.