< Back
சினிமா செய்திகள்
Sreeleelas RobinHood: First song promo released
சினிமா செய்திகள்

ஸ்ரீலீலா நடிக்கும் 'ராபின்ஹுட்': முதல் பாடலின் புரோமோ வெளியானது

தினத்தந்தி
|
25 Nov 2024 7:36 PM IST

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட்.

சென்னை,

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். கிஸ்ஸிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் நேற்று வெளியானது.

மறுபுறம் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்குகிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளநிலையில், பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தைதொடர்ந்து ஸ்ரீலீலா, ரவி தேஜாவுக்கு ஜோடியாக 'மாஸ் ஜாதரா' படத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி வெளியாகிறது.

மேலும் செய்திகள்