பாலிவுட்டில் அறிமுகமாவதை உறுதி செய்த ஸ்ரீலீலா
|ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வந்தது.
சென்னை,
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். கிஸ்ஸிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து, ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், நடிகர் ராணா டகுபதியின் 'தி ராணா டகுபதி ஷோ"வில் கலந்துகொண்ட ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாவதை உறுதி செயதுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
' ஆம், அது உண்மைதான். பாலிவுட்டில் நான் நடிக்கும் முதல் படம் அது. மிகவும் வித்தியாசமாக இருக்கும்' என்றார். தற்போது ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்குகிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.