< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சமந்தா
சினிமா செய்திகள்

'புஷ்பா 2' படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சமந்தா

தினத்தந்தி
|
4 Nov 2024 2:52 PM IST

‘புஷ்பா 2’ படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சமந்தா இணைந்து ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றி டிசம்பர் 5ம் தேதியே உலகளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்தது.

'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட்டானது. 'புஷ்பா 2' படத்தின், குத்து பாடலுக்கு இந்தி நடிகைகள் ஆட இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்ரீலீலா ஆட இருக்கிறார். அவருடன் இணைந்து சமந்தாவும் ஆட இருப்பதாகவும் வரும் 6-ம் தேதி இதற்கான படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில், குண்டூர் காரம் படத்தில் நடித்தார். அதில், 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.

மேலும் செய்திகள்