< Back
சினிமா செய்திகள்
ரஜினியை சந்தித்து மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கிய எஸ்.பி.வேலுமணி
சினிமா செய்திகள்

ரஜினியை சந்தித்து மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கிய எஸ்.பி.வேலுமணி

தினத்தந்தி
|
11 Feb 2025 3:21 PM IST

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடிகர் ரஜினியை சந்தித்து தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார்.

சென்னை,

முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணம் அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை எஸ்.பி.வேலுமணியும் அவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், எஸ்.பி.வேலுமணி இன்று நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார் இந்த சந்திப்பின்போது எஸ்.பி.வேலுமணியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். திருமண அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ரஜினி, எஸ்.பி.வேலுமணியின் குடும்பத்தினருடன் சிறிது நேரம் உரையாடியுள்ளனர். பின்னர் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்