< Back
சினிமா செய்திகள்
எம்புரான் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

'எம்புரான்' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
17 Oct 2024 8:06 AM IST

நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு 'எம்புரான்' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். சமீபத்தில் இவரது நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வெளியான 'ஆடுஜீவிதம்' மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில், அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

இவர் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் திறமையானவர். தற்போது, மோகன்லால் இயக்கத்தில் 'எம்புரான்' படத்தில் நடித்து வருகிறார். 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்த நிலையில், நடிகர் பிருத்விராஜ் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 'எம்புரான்' படத்தில் இருந்து பிருத்விராஜ் நடிக்கும் கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு பிருத்விராஜுக்கு படக்குழு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்