< Back
சினிமா செய்திகள்
சூரி நடிக்கும் மாமன் படத்தின் படப்பிடிப்பு பூஜை
சினிமா செய்திகள்

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் படப்பிடிப்பு பூஜை

தினத்தந்தி
|
16 Dec 2024 2:39 PM IST

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தை 'விலங்கு' வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ளார்.

சென்னை,

பிரபலமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் விஷாலின் "ஆக்சன்" படம் மூலம் அறிமுகமானார். 'ஜெகமே தந்திரம்' படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, கட்டா குஸ்தி ஆகிய படங்களில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர்.

இந்த நிலையில் இவர் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்க உள்ளார். இந்த படத்தை 'விலங்கு' வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ளார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு 'மாமன்' என பெயரிடப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்