< Back
சினிமா செய்திகள்
Sooris Garudan censored U/A
சினிமா செய்திகள்

சூரியின் 'கருடன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

தினத்தந்தி
|
28 May 2024 4:41 PM IST

சூரியின் 'கருடன்' படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை,

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்