< Back
சினிமா செய்திகள்
Soon - Atharvas answer to marriage question
சினிமா செய்திகள்

'விரைவில் நடக்கும்' - திருமணம் குறித்த கேள்விக்கு அதர்வா பதில்

தினத்தந்தி
|
18 Nov 2024 8:13 AM IST

அதர்வா நடித்துள்ள ’நிறங்கள் மூன்று’ படம் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அதர்வா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நிறங்கள் மூன்று' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், பட விழாவில் பேசிய அதர்வா இப்படத்தின் கதையை கேட்டதும் பயமாக இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'கார்த்திக் நரேனின் 'துருவங்கள் பதினாறு' படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்படத்தின் கதையை கேட்டதும் பயமாக இருந்தது. என் கதாபாத்திரத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தை எனக்கு இதில் அவர் கொடுத்துள்ளார்.

உண்மையிலேயே இது வித்தியாசமான படம். சரத்குமார், ரஹ்மான் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளன. எனக்கு திருமணம் எப்போது என்று பலர் கேட்கிறார்கள். அது விரைவில் நடக்கும்' என்றார்

மேலும் செய்திகள்