< Back
ஓ.டி.டி.
சோனியா அகர்வாலின் 7ஜி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஓ.டி.டி.

சோனியா அகர்வாலின் '7ஜி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தினத்தந்தி
|
6 Aug 2024 2:41 PM IST

சோனியா அகர்வால் நடித்த '7ஜி' திரைப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.

சென்னை,

செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன், கோவில், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, வானம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஹாரர் படத்தை என்.ஹாரூன் இயக்கியுள்ளார். '7ஜி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சித்தார்த் விபின், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் கடந்த மாதம்(ஜுலை) 5-ந் தேதி வெளியானது. இது ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெறும் அமானுஷ்யங்களை அடிப்படையாக கொண்ட கதையாக உள்ளது. இது நகைச்சுவை மற்றும் திகில் நிறைந்த படமாகும்.

தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தபடம் வருகிற 9-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்