சோனாக்சி சின்கா திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்
|நடிகை சோனாக்சி சின்கா, சாஹீர் இக்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் பல வருடங்களாக சாஹீர் இக்பால் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இது குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அதனைத்தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன்படி, சல்மான் கான், ரேகா, கஜோல், அனில் கபூர், தபு, ரவீனா தாண்டன், வித்யா பாலன், அதித்யா ராய் கபூர், அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.