< Back
சினிமா செய்திகள்
Sonakshi Sinha to romance Sudheer Babu?
சினிமா செய்திகள்

தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்சி சின்கா?

தினத்தந்தி
|
5 March 2025 4:21 AM IST

சோனாக்சி சின்கா தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து அறிமுகமானார்.

சென்னை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்கா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், சோனாக்சி சின்கா தெலுங்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெங்கட் கல்யாண் இயக்கி வரும் படம் 'ஜடதாரா'. இப்படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இதில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோனாக்சி சின்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாக தெரிகிறது. மேலும், இப்படப்பிடிப்பில், வருகிற 8-ம் தேதி சோனாக்சி இணைவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்