< Back
சினிமா செய்திகள்
Sonakshi Sinha to marry boyfriend Zaheer Iqbal on June 23
சினிமா செய்திகள்

பிரபல நடிகரை கரம் பிடிக்கும் சோனாக்சி சின்ஹா?

தினத்தந்தி
|
10 Jun 2024 11:25 AM IST

நடிகை சோனாக்சி சின்ஹாவும் பிரபல நடிகர் ஜாகிர் இக்பாலும் காதலிப்பதாக தகவல்கள் பரவின

சென்னை,

பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை சோனாக்சி சின்ஹாவும் பிரபல நடிகர் ஜாகிர் இக்பாலும் காதலிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், இருவரும் தங்களை நண்பர்கள் என்று கூறி அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி, வரும் 23-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்