< Back
சினிமா செய்திகள்
Sneha reveals a major fact about Vijay GOAT
சினிமா செய்திகள்

20 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை?

தினத்தந்தி
|
14 Jun 2024 12:59 PM IST

'கோட்' படத்தில், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சென்னை,

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் 20 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கும் படமாக 'கோட்' அமையும். முன்னதாக விஜய்க்கு ஜோடியாக கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'வசீகரா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் செல்வ பாரதி இயக்கினார்.

மேலும் செய்திகள்