< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
21 Nov 2024 9:43 PM IST

பிரபு தேவா நடித்துள்ள 'ஜாலியோ ஜிம்கானா' படம் நாளை வெளியாக உள்ளது.

சென்னை,

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான 'பொய்க்கால் குதிரை, பாகீரா, பேட்ட ராப்' ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனை தொடர்ந்து விஜய்யின் 'கோட்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தநிலையில், சக்தி சிதம்பரம் இயக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தில் தற்போது பிரபுதேவா நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆண்ட்ரியா குரலில் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் 'போலீஸ் காரனை கட்டிகிட்டா' பாடல் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் 2-வது பாடலான 'ஊசி ரோசி' பாடல் வெளியானது இப்பாடலை ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளார்.

இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு இது 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்