எஸ்.கே.23 - வில்லனை வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு
|சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜமால் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.
தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜமால் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்.கே.23 திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு பாலிவுட்டுக்கு செல்ல உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.