< Back
சினிமா செய்திகள்
ஜன நாயகன் படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி
சினிமா செய்திகள்

'ஜன நாயகன்' படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'

தினத்தந்தி
|
23 March 2025 3:44 PM IST

இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குஇந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இலங்கையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தியும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது. அப்படி இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் அவைகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி உருவாகப்போவது உறுதி. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் செய்திகள்