சிவகார்த்திகேயன் கெரியரில் சிறப்பாக அமைந்த 'அமரன்'- முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
|சிவகார்த்திகேயன் கெரியரில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற படமாக 'அமரன்'அமைந்துள்ளது.
சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நேற்று திரையரங்கில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அமரன் படம் நேற்று மட்டும் உலகம் முழுவதும் ரூ.21 கோடி வசூலித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழ் நாட்டில் மட்டும் ரூ.15 கோடி ஆகும். இது சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' படம் முதல் நாளில் வசூல் செய்ததை விட அதிகமாகும். இந்தியன் 2 முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்தது.
இந்த ஆண்டு இதுவரை, விஜய்யின் 'தி கோட்' மற்றும் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஆகிய படங்கள் மட்டுமே நல்ல தொடக்கத்தை பெற்றிருந்தநிலையில், தற்போது 'அமரன்' ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து சிவகார்த்திகேயன் கெரியரில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற படமாக அமைந்துள்ளது.