< Back
சினிமா செய்திகள்
அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
சினிமா செய்திகள்

அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

தினத்தந்தி
|
13 Nov 2024 11:35 PM IST

அமரன் கெட்டப்பில் மனைவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிய 'அமரன்' படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்தது.

இந்தநிலையில் அமரன் படம் கெட்டப்பில் ராணுவ உடையில் மனைவி ஆர்த்திக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக் செய்தும், டிரெண்ட்ங் செய்தும் வருகின்றனர்.

மேலும் செய்திகள்