'நேசிப்பாயா' இசை வெளியீட்டு விழாவில் தனது மாமனார் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்
|நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமனார் , யுவன் ஷங்கர் ராஜா குறித்து இசை வெளியீட்டு விழாவில் பாராட்டி பேசியுள்ளார்.
சென்னை,
'குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு 'நேசிப்பாயா' என்று பெரியடப்பட்டுள்ளது.இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாக்கி இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லரை நேற்று வெளியாகி வைரலானது.
'நேசிப்பாயா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "நான் இந்த விழாவிற்கு வந்தது முக்கிய காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் சிநேகா ப்ரிட்டோ மற்றும் இயக்குநர் விஷ்ணுவர்தன் தான். இப்படத்தின் தொடக்க விழாவிற்கு அவர்கள் அழைத்த போது என்னால் வர முடியவில்லை. மேலும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ எவ்வளவு நல்ல மனிதர் என்பதை கேள்விப்பட்டுள்ளேன். அவர் மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதை, தொழில் சார்ந்த விஷயங்களில் நடந்து கொள்ளும் விதம் என ஒரு நல்ல மனிதராக கேள்விப்பட்டுள்ளேன்" என்றார்.
பின்னர் தனது மாமனார் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், "நாம் வாழ்க்கையில் தாய், தந்தை, நண்பர்கள் என அனைத்து உறவுகள் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும் போது பாராட்டி பேசி விடுவோம். ஆனால் மாமனார் என்பது ஒரு ஸ்பெஷலான உறவு. நடிகர் ஆகாஷுக்கு அவ்வாறு அமைந்துள்ளது, உங்களுக்கு நல்ல மாமனாராக சேவியர் பிரிட்டோ கிடைத்துள்ளார். ஏனென்றால் என் மாமனார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், எனக்கு அவரது மகளை கொடுத்தது பெரிய விஷயம். நான் தொகுப்பாளராக இருந்த போது எனக்கு 4500 ரூபாய் தான் கிடைக்கும். அப்போது என்னை நம்பி அவரது மகளை திருமணம் செய்து வைத்தார். நான் சினிமாவில் சாதிப்பேன் என் மாமனார் என்னை நம்பினார்" என கூறினார்.
இதனைத்தொடர்ந்து விஷ்ணுவர்தன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், "நேசிப்பாயா பாடல்கள் நன்றாக உள்ளது. யுவன், விஷ்ணு காம்போ குறித்து சொல்லவே தேவையில்லை. அது மேஜிக்கல் கூட்டணி. எனது கல்லூரி காலத்தில் இரண்டு பொழுபோக்குகள் தான் ஒன்று சினிமா பார்ப்பது, மற்றொன்று கேசட்கள் வாங்கி பாடல்கள் கேட்பது. யுவன், விஷ்ணுவர்தன் கூட்டணியில் குறும்பு திரைப்படம் தான் ரீமிக்ஸ் கலாசாரத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. விஷ்ணுவர்தன் சார் அனைத்து படங்களையும் தியேட்டரில் சென்று பார்த்துள்ளேன். அவர் இயக்கிய 'ஷேர்ஷா'சூப்பர் திரைப்படம். அமரன் டீசர் வெளியான போது பலர் அதனை 'ஷேர்ஷா' படத்துடன் தான் ஒப்பிட்டு பாராட்டினர்" என்றார்.
பின்னர் யுவன் ஷங்கர் ராஜா குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், "யுவன் சாரை சிம்பிளாக கோட் என்று சொல்லலாம். ஏனென்றால் சிறிய இயக்குநர்கள், பெரிய இயக்குநர்கள் என்று பார்க்காமல் தன்னை நம்பி வந்தவர்களுக்கு அவ்வளவு ஹிட் பாடல்கள் வழங்கியுள்ளார். இந்த விஷயம் அவரது அப்பாவிடம் வந்தது, அவரது ரத்தத்தில் உள்ளது. ஒருமுறை அவரது பாட்டை கேட்டு, கால் செய்து யுவன், முத்துக்குமார் காம்போவை மிஸ் பண்ணுவதாக கூறினேன். அந்தளவிற்கு நான் தீவிர யுவன் ரசிகன். இன்றைக்கும் 'நேசிப்பாயா' பாடல்களை கேட்கும் போது விண்டேஜ் வைப் உள்ளது. யுவன் சார் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த காலகட்டத்தில் நான் கல்லூரி படித்து கொண்டிருந்தேன்" என்றார்.
பின்னர் அதர்வா பற்றி பேசிய சிவகார்த்திகேயன், "உங்களை பற்றி தற்போது எதுவும் பேசவில்லை, சுதா கொங்குரா இயக்கத்தில் நாம் இணைந்து நடித்து வரும் படத்திற்காக சேர்த்து வைத்துள்ளேன். அப்படத்தில் அதர்வா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்" என கூறினார்.