< Back
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பாராட்டு
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பாராட்டு

தினத்தந்தி
|
28 Nov 2024 3:16 PM IST

அமரனில் முகுந்த் வரதராஜனாக நடித்து பெயர் பெற்ற சிவகார்த்திகேயனை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பாராட்டியுள்ளது.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.320 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேஜர் முகுந்தாகவே அமரன் திரைப்படத்தில் வாழ்ந்து, அவருக்கு மேலும் பெருமை சேர்த்த சிவகார்த்திகேயனை சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் சிவகார்த்திகேயனை அழைத்து கவுரவித்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவராக சித்தரிக்கும் அற்புதமான நடிப்பிற்காக இந்த பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ராணுவ பயிற்சி மையம் சார்பில் பாராட்டு கிடைத்தது பெருமைக்குரிய ஒன்று என்று ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்