3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன் - வீடியோ வைரல்
|சிவகார்த்திகேயன் தனது 3-வது குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி வருகிறார். இவர் சினிமாவில் நுழையும் முன்பே திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய சொந்த மாமா பொண்ணான ஆர்த்தியைதான் சிவகார்த்திகேயன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ஆராதனா. ஆராதனா தன்னுடைய 5 வயதிலேயே சினிமாவில் 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடி இருக்கிறார். தற்போது ஆராதனாவுக்கு 11 வயது ஆகிறது.
2021-ம் ஆண்டு பிறந்த 2-வது குழந்தைக்கு குகன் தாஸ் என பெயரிட்டுள்ளனர். அவரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செல்லமாக குட்டி எஸ்.கே. என அழைத்து வருகின்றனர். தற்போது குகன் தாஸுக்கு 3 வயது ஆகிறது.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு கடந்த மாதம் 2-ந் தேதி 3-வது குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவல்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
தற்போது, சிவகார்த்திகேயன் தனது 3-வது குழந்தைக்கு 'பவன்' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், பெயர் சூட்டு விழாவில் எடுத்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.