< Back
சினிமா செய்திகள்
கூலி படத்தில் சிவகார்த்திகேயன்?
சினிமா செய்திகள்

'கூலி' படத்தில் சிவகார்த்திகேயன்?

தினத்தந்தி
|
9 Nov 2024 8:17 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 'கூலி' படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் 'தேவா' என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு பணியில் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். 'அமரன்' வெற்றிக் கொண்டாட்டத்தின் நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

அதில் "நான் அடிக்கடி லோகேஷ் கனகராஜை சந்திப்பேன். நானும் அவரும் இன்னும் சிலரும் நண்பர்களும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். எனது வீட்டிற்கு எதிரில்தான் 'கூலி' படப்பிடிப்பு பணிகள் நடைபெறுகிறது. நான் அமரன் படத்தின் புரமோஷன் வேலைகளில் இருந்ததால் அங்கு செல்லவில்லை. கூலி படப்பிடிப்புக்கு இனிமேல்தான் செல்ல வேண்டும். நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. கூலி எனது தலைவர் ரஜினி நடிக்கும் படம் அவ்வளவு தான். தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்று அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்