'சீதா ராமம்' படத்தின் நீக்கப்பட்ட காட்சி - இணையத்தில் வைரல்
|'சீதா ராமம்' படத்தில் நீக்கப்பட்ட ராஷ்மிகாவின் 1 நிமிட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை,
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 1964-ம் ஆண்டு கால கட்ட பிண்ணனியில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ அதிகாரி முகவரி இல்லாமல் தனக்கு வரும் காதல் கடிதங்களை படித்து, அதை அனுப்பிய பெண்ணை கண்டுபிடிக்கிறார். அந்த பெண்ணுடன் அவரால் சேர்ந்து வாழ முடிந்ததா என்பதை உருக்கமாக படமாக்கி இருந்தனர்.
காதல் கடிதங்களை அனுப்பும் பெண்ணாக மிருணாள் தாகூர் நடித்து இருந்தார். இதில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்ரீன் அலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் நீக்கப்பட்ட ராஷ்மிகாவின் 1 நிமிட காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒரு கல்லூரிக்குள் காரில் செல்லும் ராஷ்மிகா அங்கு ஒரு பெண்ணிடம் பேசுகிறார். பின்னர் வெளியே வந்து அவர் சென்ற கார் டிரைவரின் நேர்மையை சந்தேகிக்கிறார், இவ்வாறு உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.