சார் படத்தின் 'பூவாசனை' வீடியோ பாடல் வெளியீடு
|விமல் நடிப்பில் வெளியான 'சார்' படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். இவர் தற்போது 'சார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என தலைப்பிடப்பட்ட இப்படம் தற்பொழுது "சார்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த 18-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி, சீமான் அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.
இந்தநிலையில் இப்படத்தின் 'பூவாசனை' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.