தொடர்ந்து வசூலை குவிக்கும் 'சிங்கம் அகெய்ன்': 4 நாட்களில் ரூ.125 கோடி வசூல்
|கடந்த 1-ம் தேதி வெளியான சிங்கம் அகெய்ன் படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூலித்தது
மும்பை,
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார்.இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, தற்போது 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்க கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூலித்தது. தற்போது 4 நாட்களை கடந்தும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி, இப்படம் 4 நாட்களில் ரூ.125 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.