'சிம்பு 49' படத்தின் அப்டேட்...!
|நடிகர் சிம்பு நடிக்க உள்ள 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48-வது படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் சிம்பு இணைந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில், தற்போது சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்" எனத் தெரிவித்துள்ளார். இதனால், இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளது உறுதியாகி உள்ளது.
இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க உள்ளார். இது சிம்புவின் 49-வது படமாகும். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.