சூர்யா44 படத்தில் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்திய ஷ்ரேயா சரண்
|சூர்யாவுடன் முதல்முறையாக ஷ்ரேயா சரண் நடித்துள்ளார்.
சென்னை,
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இவர், இறுதியாக தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர், தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூர்யா 44 படத்தில் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளார். இதில், இவர் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இதுவரை இவர் இப்படத்தில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாதநிலையில், தற்போது அதை ஷ்ரேயா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
'பாடல் சிறப்பாக வந்துள்ளது. சீக்கிரம் வெளியாகும்' என்றார். இப்பாடல் கோவாவில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 'சூர்யா 44' அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. சூர்யாவுடன் முதல்முறையாக ஷ்ரேயா சரண் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.