ஒரு நடிகரின் மகன் நடிகராகக் கூடாதா?...சூர்யா விஜய்சேதுபதி
|நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அனல் அரசு இயக்கத்தில் 'பீனிக்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் 'பீனிக்ஸ்'.
இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, "டாக்டர் என் மகன் டாக்டர் ஆகவில்லையா?, போலீஸ்காரர் மகன் போலீஸ் ஆகவில்லையா?, அப்போது ஏன் ஒரு நடிகருடைய மகன் மட்டும் நடிகராக கூடாது? சினிமாவில் ஒரு நடிகருடைய மகன் என்றால் வாய்ப்பு மட்டும் தான் கிடைக்கும். வாய்ப்பு வேண்டுமென்றால் அதை தக்க வைக்க திறமை இருந்தால் மட்டும் போதும்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து நெட்டிஷன்கள் பலரும் சூர்யாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.